பிராமண சமையல் மைசூர் பாகு|iyengar sweet recipes in tamil

 

 செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 1 கப்
நெய் – 1 1/4 கப்
எண்ணெய் – 3/4 கப்
சர்க்கரை – 2 கப்
பால் – 1/4 கப்
தண்ணீர் – 1 /4 கப்
சமையல் சோடா – 1சிட்டிக
செய்முற
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு சூடு செய்துகொள்ள வேண்டும். பிறகு, கடாயை சூடுபடுத்தி, அதில் கடலை மாவைச் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை தீயவிடாமல் சிவக்க வறுக்க வேண்டும். பச்சை வாசனை சென்ற உடன் அடுப்பை நிறுத்தி விட்டு, அதில் நெய் மற்றும் எண்ணைய்யை சேர்த்து கலந்து இறக்கி வைக்கவும்.

 

iyengar sweet in tamil ,iyengar sweet seivathu epppadi,iyengar sweet cooking tamil nadu,iyengar sweet seimurai
மீண்டும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து நன்றாக சூடு செய்யவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் பாகு பதத்துக்கு வரும் வரை நன்றாக காய்ச்சி கலக்கவும். பாகு பதம் வந்ததும் இதோடு நாம் தயாரித்து வைத்த மாவைச் சேர்த்து கலக்க வேண்டும். நன்றாக மாவு கலந்ததும், சூடாக வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்க வேண்டும். கலவை கெட்டியானதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி தேவையான அளவுகளில் துண்டுகளாக செய்து ருசிக்கவும்.

Loading...
Categories: Iyengar Samayal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, பிராமண சமையல்

Leave a Reply


Sponsors