காராமணி குழம்பு|karamani kuzhambu in tamil

தேவையானவை:

காராமணி – முக்கால் கப்,
கத்திரிக்காய் – 2,
வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், தக்காளி – தலா 1,
பூண்டு – 2 பல்,
புளி – நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்,
தேங்காய் துண்டுகள் – 2,
சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்,
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு

karamani kuzhambu in tamil ,samyal kurippu karamani kuzhambu ,cooking tips karamani kuzhambu.
செய்முறை:

தேங்காய், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காராமணியை வறுத்து குக்கரில் போட்டு, தண்ணீர் விட்டு 5 விசில் வரும்வரை வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கத்திரிக்காய், கீறிய பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் – சீரக விழுதைப் போட்டு, புளியைக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும், வேக வைத்த காராமணியை சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் குழம்பில் கொட்டி, கத்திரிக்காய் வெந்ததும் இறக்கவும்.

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors