கரு உருவாதலின் ரகசியம்|karu uruvagum murai

பொதுவாக உடல் உறவின்போது ஓர் ஆணுக்கு ஏறக்குறைய 1.5 மி. லி. முதல் 3.5 மி.லி. வரையில் விந் து வெளியேறும். ஒவ்வொரு மி.லி. விந்திலும் கோடிக்கணக்கான உயி ரணுக்கள் இருக்கும்.

எப்போது உட ல் உறவு வைத்துக் கொ ண்டாலும் 60 முதல் 450 மில்லியன் உயிரணு க்கள் கரு முட்டை யைச் சந்திக்கத் தயாராக இருக்கும். உடல் உறவின் போது பெண்ணின் ஜனன உறுப்பில் பீய்ச்சப்படும் விந்தில் உள்ள உயிர் அணுக்கள் பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் சென்று, ஃபெலோபிய ன் குழாய் வழியாகப் பயணித்து முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திக்க கிட்டத்தட்ட 1 முதல் 5 மணி நேரம் ஆகும்.

இந்தப் பயணத்தி ல் லட்சக்கணக்கான உயிர் அணுக்கள் இறந்துவிடும். கடைசியாக சுமார் 3,000 உயிர் அணுக்கள் மட்டுமே ஃபெலோபிய ன் குழாயைச் சென்றடையும். இதிலும் முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சந்திப் பது சில நூறு உயிர் அணுக்கள்தான். இவற்றில் ஒரே ஓர் உயிர் அணு மட்டும் தான் முதிர் ச்சி அடைந்த முட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கருவாகும்.

karu uruvagum murai

உயிர் அணுவை நுண்ணோக்கி வழியா கப் பார்த்தால் அதற்கு ஒரு தலை, உடம் பு, வால் பகுதி இருப்பதைப் பார்க்கலாம். இந்த வால் பகுதியால்தான் உயிர் அணு நீச்சல் அடித்து முன்னேறுகி றது. உயிர் அணுவின் தலைப் பகுதியில் சில ரசாயன என்சைம்கள் இருக்கும். அந்த என்சைம்கள் கரு முட் டையின் சுவரை அரித்து ஒரு சிறு துவாரம் உண்டாக்கும். அது வழியாக ஒரே ஓர் உயிர் அணுவின் தலையில் இருக்கும் நியூக் ளியஸ் மட்டும் உள்ளே நுழை ந்துவிடும். உயிர் அணுவின் தலை, உடம்பு, வால் பகுதிகள் உள்ளே போகாது. கருமுட்டை யில் இருக்கும் நியூக்ளியஸு ம் உயிரணுவில் இருக்கும் நி யூக்ளியஸும் ஒன்று சேருவத னால் கர்பம் உண்டாகிவிடும். பின், இப்படி ஒன்று கலந்த நியூக்ளியஸ் ஒன்று இரண்டா கி, இரண்டு நான் காகும்… இப் படியே பல்கிப்பெருகி ஒரு வாரம் கழித்து ஒரு பெரிய பந்து மாதிரி உருவாகி எண் டோமெட்ரீயத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

ஒரு பெண்ணின் கரு முட்டை முதிர்ச்சி அடைந்து இருந்தால் ஒரே ஒரு தடவை உறவுவைத்துக்கொண்டால்கூட கர்பம் தரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. இன்னும் சிலர் ‘சில குறிப்பிட்ட நாட்களில் உறவு வைத்துக்கொ ண்டால் கர்பம் தரிக்காது’ என்று உத்தேசமாகச் சொல்வார்கள். அது , அந்தந்தப் பெண்ணின் மாத விடா ய்ச் சுழற்சி சரியாக உள்ளதா என்ப தைப் பொறுத்தது.மாதவிடாய் தொடங்கியதினத்தை முதல் நா ளாக வைத்துக்கொண்டால் சரியாக 9-வது நாளில் இருந்து 18-ம் நாள் வரையில் கர்ப்பம் தரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால், ‘உல கம் முழுவதும் 8 சதவிகிதம் பெண்களுக்குத்தான் மாதவிடாய் சுழற் சி மிகச்சரியாக 28 நாட்களுக்கு ஒரு தடவை வருகிறது’ எனக் கண்ட றிந்துள்ளது மருத்துவ உலகம். எனவே, ‘இந்த நாட்களில் இவர்கள் உறவு வைத்துக்கொண்டால் கர்பம் தரிக்காது அல்லது தரிக்கும்’ என்று எவரா லும் துல்லியமாக வரையறுத்துச் சொல்ல முடி யாது.

‘எந்நிலையில் (position) உடல் உறவு வைத்துக்கொண்டால் கர்ப்பம் தரிக்கும்?’ என்கிற கேள்வியும் பலருக்கு உண்டு. உறவின்போது பெண் கீழ் இருக்கும் நிலைதான் கர்பம் தரிப்பதற்கு ஏற்ற நிலை. கர்பம் தரிக்கவேண்டும் என்று விரும்பும் பெண் உடல் உறவுக்குப் பின்னர் படுக்கையில் இருந்து உட னே எழுந்துகொள்ளாமல் 20 நிமி டங்கள் அதே நிலையிலேயே படு த்து இருக்க வேண்டும்.

இப்போது சில நவீன ஸ்ட்ரிப்புகள் வந்துள்ளன. இதனை பெண்ணின் சிறு நீரில் நனைத்து சோதித்தால் முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியாகும் நாட்களை ஓரளவு கணிக்க முடியும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் கண்டறியலாம். – See more at: http://kpyramid.blogspot.com/2012/08/blog-post_27.html#sthash.rMRTtEra.dpuf

Categories: Maruthuva Kurippugal in Tamil, Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors