கருத்தரிப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய சோதனைகள்|Karutharippu tips tamil

Loading...

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது உன்னதமான அனுபவமாகும். தாயாக போகும் உணர்வை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. கர்ப்ப காலத்தில் ஒன்பதாம் மாதத்தில் மன ரீதியான தயார்நிலையும் நல்ல உடல்நிலையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் தேவைப்படும்.

எந்த ஒரு சிக்கல்களும் இன்றி பல தம்பதிகள் பெற்றோர் நிலையை கொண்டாடினாலும், பல தம்பதிகள் இந்த நேரத்தில் பல சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு மோசமான வாழ்க்கைமுறை, உடல் பருமன் அல்லது மரபு ரீதியான கோளாறுகள் போன்ற பல்வேறு காரணங்கள் பின்னணியில் உள்ளது.

Karutharippu tips tamil,pragancy tips in tamil,pregancy test tips in tamil

நீங்கள் கருத்தரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தால் கருத்தரிப்பதற்கு முன்பான சோதனைகள் என்பது உங்கள் உடல் முழுவதும் முழுமையாக எடுக்கப்படும் அடிப்படை சோதனையாகும்.

தைராய்டு ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரந்தால், அதனை ஹைப்பர் தைராய்டிசம் என அழைப்பார்கள். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். குறைவாக சுரப்பதை தைராய்டு சுரப்பு குறை என கூறுவார்கள். இதனால் பிறக்க போகும் குழந்தைக்கு மூளை கோளாறுகள் ஏற்படலாம். கருத்தரிப்பதற்கு முன்பாக என்ன சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரிடம் கேட்டால், கண்டிப்பாக அந்த பட்டியலில் தைராய்டு சோதனை இடம் பெறும்.

கருத்தரிப்பதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முக்கியமான சோதனைகளில் பொதுவாக இரத்த சோதனை முதல் இடத்தை பிடிக்கும். இரத்த சோதனைகள் உங்கள் இரத்த எண்ணிக்கையை முழுமையாகவும் சிஃபிலிஸ், எச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி போன்ற பல்வேறு நோய்களையும் சோதிக்க உதவும். இரத்த சோகை மற்றும் ஃபைப்ரோஸிஸ் கட்டி போன்ற மரபு ரீதியான நோய்களை சோதிக்கவும் இது உதவும்.

இரத்தத்தில் அதிக சர்க்கரை, அதிக புரதம் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று போன்ற பாக்டீரிய தொற்றுகள் இல்லை என்பதை உறுதி செய்ய சிறுநீர் சோதனைகள் எடுக்கப்படும். இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக இருந்தால், கருத்தரிப்பதற்கு முன்பாக சிகிச்சைக்கு நீங்கள் உடனடியாக நீரிழிவு நோய் மருத்துவரை சந்திக்க பரிந்துரைக்கப்படுவீர்கள். சிறுநீர் பாதையில் தொற்று என்றால் அளவுக்கு அதிகமாக நீராகாரம் மற்றும் ஆன்டி-பையாடிக்ஸை குடிக்கவும்.

உயிரணு ஓட்ட சோதனைகள் பெண்ணுறுப்பு, கருப்பை வாய் மற்றும் இடுப்பு பகுதிகளில் உயிரணு ஓட்ட சோதனைகள் மற்றும் முழுமையான உடல் பரிசோதனைகள் எடுக்க பொதுவாகவே பரிந்துரைக்கப்படும். கருத்தரிப்பதற்கு முன்பு இந்த சோதனைகளை மேற்கொண்டால் கர்ப்ப காலத்தில் எழும் சிக்கல்களைத் தவிர்க்கலாம். உங்கள் பெண்ணுறுப்பு அல்லது கருப்பை வாயில் தொற்றுக்கள் இருந்தால், உயிரணு ஓட்ட சோதனைகள் அவற்றை வெளிப்படுத்தும்.

தடுப்பூசிகள் மூலமாக, பிறப்பு குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவுகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

Loading...
Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors