புளிச்சக்கீரை மட்டன் குழம்பு |keerai mutton kulambu in tamil

Loading...

தேவையான பொருட்கள்: புளிச்சக்கீரை – 1 கட்டு (நறுக்கியது) மட்டன் – 1/2 கிலோ வெங்காயம் – 2 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கரம் மசாலா – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் ஏலக்காய் – 3-4 கிராம்பு – 2-3 பட்டை – 1 இன்ச் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி – சிறிது

keerai mutton kulambu,keerai mutton kulambu recipe in tamil ,keerai mutton kulambu samayal kurippu,cooking tips in tamil keerai mutton kulambu

செய்முறை: முதலில் புளிச்சக்கீரையை சுத்தம் செய்து, நீரில் அலசி தனியா வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், புளிச்சக்கீரையை சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதனை மூடி வைத்து, 4-5 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 4-5 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும். பின் அதில் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 3-4 நிமிடம் வேக வைத்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி குறைவான தீயில் 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும், குக்கரை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் புளிச்சக்கீரையை நன்கு மசித்து சேர்த்து கிளறி மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைத்து, பின் கரம் மசாலா சேர்த்து பிரட்டி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை மட்டன் குழம்பு ரெடி!!!

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors