கேழ்வரகு தோசை|Kelvaragu dosai in tamil

தேவையானவை:

கேழ்வரகு மாவு – 1 கப்,

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு – அரை கப்,

உப்பு – தேவைக்கேற்ப,

சின்ன வெங்காயம் – 15,

பச்சை மிளகாய் – 2,

சீரகம் – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – தேவையான அளவு.

Ragi Dosa in tamil ,Kelvaragu dosai intamil ,samyal kurippu Kelvaragu dosai,cooking tips Kelvaragu dosai.Kelvaragu dosai tamil nadu recipe

செய்முறை:

கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்). வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.

மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும். இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.

Categories: Dosai recipes in tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors