கேரளா மட்டன் ரோஸ்ட்|kerala mutton roast in tamil

Loading...

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பொட்டுக்கடலை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்

அரைப்பதற்கு…

சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 5
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 பெரிய துண்டு
பூண்டு – 6 பெரிய பற்கள்

 

kerala mutton roast in tamil,kerala samyal , mutton roast cooking tips

செய்முறை:

முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

அடுத்து அதனை குக்கரில் போட்டு, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை அடுப்பில் வேக வைக்க வேண்டும். மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

Loading...
Loading...
Categories: Kerala Samayal Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors