கேரளா பரோட்டா |kerala paratha in tamil

தேவையான பொருட்கள்: மைதா – 1 கப் உப்பு – 1/2 டீஸ்பூன் ஓமம் – 1/2 டீஸ்பூன் நெய் – 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 2 கப் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, ஓமம் மற்றும் 3 டீஸ்பூன் நெய் சேர்த்து, வெதுவெதுப்பான நீர் சேர்த்து, 20-25 நிமிடம் நன்கு பிசைய வேண்டும். மாவானது நன்கு மென்மையானதும்,

kerala paratha in tamil,kerala paratha samayal kurippu,soft kerala paratha seivathu eppadi,kerala paratha cooking tips tamil font

 

அதனை ஒரு ஈரமான துணியால் மூடி, 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் கைகளில் எண்ணெயை தடவிக் கொண்டு, மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு தவாவை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். அடுத்து உருண்டைகளை பரோட்டா போன்று தேய்த்துக் கொண்டு, தவாவில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும். இப்போது சூப்பரான கேளரா ஸ்டைல் பரோட்டா ரெடி!!! இதனை சிக்கன் குருமாவுடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

Loading...
Categories: Kerala Samayal Tamil, Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors