கடலை கறி கேரளா சமையல்|kondai kadalai kulambu in tamil

கடலை கறி – தேவையான பொருட்கள்

கருப்பு கொண்டை கடலை – 1கப்
சின்ன வெங்காயம் (நறுக்கியது) – 1 கப்
தேங்காய் (துருவியது) – 1 கப்
கொத்தமல்லித் தூள் – 2 தேக்கரண்டி
வற்றல் பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
தேங்காய் (துண்டுகள்) – ¼ கப்
தக்காளி (நறுக்கியது) – ¼ கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
கடுகு
மிளகாய் வற்றல்
இஞ்சி-பூண்டு (விழுது)
கடலை கறி – செய்முறை
கொண்டை கடலையை 10 மணி நேரம் ஊற வைத்து அதோடு உப்பு சேர்த்து வேக வைத்து தனியாக வைக்கவும்.

kondai kadalai kulambu,kerala samayal kondai kadalai kulambu

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தேங்காய் துருவலைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி எடுக்கவும், அதோடு கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அவற்றை விழுதாக அரைக்கவும்

ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு பண்ணவும், பின்னர் கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு அது பொரியத் தொடங்கியதும் தேங்காய்த் துண்டைப் போட்டு நன்கு கிளறவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அதன் பின்னர் வெங்காயம் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து மெதுவாக கிளறவும். பின்னர் அவித்து வைத்த கொண்டைக் கடலையை அத்தோடு சேர்த்து போதுமான நீர் உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும்.

பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அவித்து வைத்த கொண்டை கடலையோடு சேர்த்து மேலும் நன்கு வேக விடவும்.

நன்கு வெந்ததும் நீங்கள் இப்போது நறுக்கிய கொத்தமல்லி இலைத்தூவி இதனை அலங்கரித்து புட்டுவோடு சேர்த்து பரிமாறலாம். இந்த புட்டு – கடலை கறி சேர்த்து சாப்பிடுவது மிகவும் சுவையாக இருக்கும்.

Categories: Kerala Samayal Tamil, Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors