செளசெள கூட்டு|KOOTU recipe IN TAMIL

தேவையானப்பொருட்கள்:

செளசெள – 1
பாசி பருப்பு – 1/2 கப்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணை – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சாம்பார் வெங்காயம் – 2

 

 

செளசெள கூட்டு

செய்முறை:

பாசி பருப்புடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்  குழைய விடக் கூடாது.

செள செளவின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கியத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு வேக விடவும். காய் நன்றாக வெந்தவுடன், அதில் வேக வைத்த பருப்பைக் கொட்டிக் கிளறி விட்டு மீண்டும் ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் கடுகு, பொடியான நறுக்கிய சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors