குழாய் புட்டு|kulai puttu in tamil

புட்டரிசி மாவு (கடைகளில் கிடைக்கிறது) அல்லது பச்சரிசி அல்லது சிவப்பு புட்டரிசி – தேவைக்கேற்ப,
உப்பு அல்லது சர்க்கரை – தேவைக்கேற்ப,
தேங்காய்த் துருவல் – தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் – சிறிது.

kulai puttu,kulai puttu recipe,kulai puttu samayal kurippu,kulai puttu cooking tips in tamil,kulai puttu tamil nadu samayal

புட்டரிசி மாவை அப்படியே உபயோகிக்கலாம். அல்லது பச்சரிசியையோ, புட்டரிசியையோ வாங்கி 2 மணி நேரம் ஊற வைத்து, நிழலில் உலர்த்தவும். லேசான ஈரம் இருக்கும் போதே மெஷினில் கொடுத்து புட்டுக்கு எனச் சொல்லி நைசாக அரைத்துக் கொள்ளவும். மாவை சலிக்கத் தேவையில்லை. தேவையான மாவை எடுத்து ஒரு துணியில் கொட்டி, 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும். வெந்ததை ஒரு தட்டில் கொட்டிப் பரத்தி, புட்டுக் குழாயில் சிறிது மாவு, சிறிது தேங்காய்த் துருவல், சிறிது சர்க்கரை என மாறி மாறி வைத்து, மறுபடி வேக வைத்து எடுத்து அழுத்தித் தட்டினால் அப்படியே குழாய் வடிவில் அழகாக வந்து விழும்.

* இனிப்பு பிடிக்காதவர்கள் சர்க்கரை, ஏலக்காயைத் தவிர்த்து, மாவுடன் சிறிது உப்புச் சேர்த்து, தேங்காய்த் துருவல் மட்டும் வைத்தும் செய்யலாம். முதலில் தயார் செய்த புட்டு மாவை வெறுமனே வறுத்துவிட்டு, பிறகு ஆவியில் வேக வைத்து, விருப்பம் போல இனிப்போ, உப்போ சேர்த்தும் பரிமாறலாம்

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors