குழிப் பணியாரம்|Kuzhi Paniyaram Recipe

தேவையானவை:
1 1/2 கப் பச்சரிசி
1 1/2 புழுங்கல் அரிசி
1/2 கப் உளுத்தம் பருப்பு
சிறிது வெந்தயம்
வெல்லம் ‍
உப்பு
பச்சை மிளகாய்
தேங்காய் துருவல்
கறிவேப்பிலை

செய்முறை:

இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.
பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே கிரைண்டரை நிறுத்தி விடவும்.
சிறிது உப்பு சேர்த்து, மாவைக் கரைத்து புளிக்க வைக்கவும்.

 

Kuzhi Paniyaram Recipe in tamil samyal kurippu

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கான்ஸப்ட் இங்கயும் அப்ளை பண்ணலாம் 🙂

முதல் மாங்காய்: இனிப்புப் பணியாரம்

வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரையும் வரை விடவும்.
புளித்த மாவை தேவையான அளவு எடுத்து, தேங்காய் துருவல் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
அதில் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

இரண்டாவது மாங்காய்: வெள்ளை

வானலியில் சிறிது எண்ணைய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுவெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
புளித்த மாவைத் தேவயான அளவு எடுத்து, நீர், உப்பு, தேங்காய் துருவல் சிறிது, மற்றும் தாளித்தவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.

இப்ப பணியாரம்:

அடுப்பில் குழிப் பணியாரச் சட்டியை வைத்து, அனைத்துக் குழிகளிலும் சிறிதுஎண்ணைய் விடவும்.
சட்டி சூடானவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
சிறிது நேரம் கழித்து கருது ஒரு மூலையில் பிடித்து அப்படியே அலாக்காகதூக்கித் திருப்பி விடவும்.
சில விநாடிகளில் பணியாரம் ரெடி.

Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சைவம்

Leave a Reply


Sponsors