எலுமிச்சை ஊறுகாய்|lemon oorugai Recipe in tamil

தேவையான பொருட்கள்
எலுமிச்சம்பழம் – 1/2 கி
மிளகாய் பொடி – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1/4 ஸ்பூன்
செய்முறை

lemon oorugai,lemon oorugai seimurai, oorugai vaigaigal

முதலில் எலுமிச்சம்பழத்தை குக்கரில் போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி 3 விசில் வர விடவும்
பிறகு எலுமிச்சம்பழத்தை எடுத்து நான்காகவோ அல்லது 8 ஆகவோ வெட்டி வேகவைத்த தண்ணீருடன் போட்டு அதில் மிளகாய் பொடி, உப்பு போட்டு கலக்கி வைத்து கொள்ளவும்
பிறகு வேறொரு வாணலியில் கடுகை போட்டு பொரித்து அதனுடன் பெருங்காயத்தையும் போட்டு பொரித்து எலுமிச்சம்பழத்தையும் பொட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடலாம்
இந்த ஊறுகாய் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும் அவ்வபொழுது வெயிலில் வைத்து எடுத்து வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்

Categories: oorugai Recipes In Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors