மசால் வடைக் குழம்பு|masal vadai kulambu cooking tips in tamil

தேவையான பொருள்கள்:
மசால் வடை – 10
வெங்காயம் – 75கிராம்
பச்சை மிளகாய் – 2
மல்லிப் பொடி -இரண்டு தேக்கரண்டி
மிளகாய் பொடி – ஒன்றரைத் தேக்கரண்டி
மஞ்சள் பொடி – சிறிதளவு
தேங்காய் துருவியது – 5 தேக்கரண்டி
சோம்பு – அரைத் தேக்கரண்டி
முந்திரி -5
இஞ்சி – சிறுதுண்டு
சமையல் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
கிராம்பு- 2
மிளகு – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு தேக்கரண்டி
மல்லி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வடை செய்ய:
அரை கிலோ ஆழாக்குக் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
நன்கு ஊறிய பிறகு நீரை சுத்தமாக வடிகட்ட வேண்டும்.
அதில் ஒரு தேக்கரண்டிப் பருப்பை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மீதி உள்ள கடலைப் பருப்பை உப்பு போட்டு பரபரவென்று மிக்சியில் அரைக்க வேண்டும்.
அரைத்த மாவுடன் தனியே எடுத்து வைத்த ஒரு தேக்கரண்டி கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிணைய வேண்டும்.
பின்பு எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்ட வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் காய்ந்ததும் பருப்பு உருண்டையை வடையாக செய்து எண்ணெயில் போட வேண்டும்.
வடையை இருபுறமும் திருப்பி விட்டு வடை நன்கு வெந்ததும் எண்ணெய் இல்லாமல் வடித்து எடுக்க வேண்டும்.

masal vadai kulambu ,masal vadai kulambu  samayal kurippu,masal vadai kulambu  recipe cooking tips ,masal vadai kulambu tamil nadu
இப்போது சூடான மசால் வடை ரெடி.
மசால் வடைக் குழம்பின் செய்முறை:
மசால் வடையை கடையிலும் வாங்கலாம் வீட்டிலும் சுடலாம்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சோம்பு மற்றும் முந்திரியை வறுக்க வேண்டும்.
பின்பு தேங்காய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.அதனுடன் இஞ்சி சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கிராம்பு, பச்சை மிளகாய் போட்டு நன்கு பொரிய விட வேண்டும்.
பொறிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
நன்கு வதக்கிய பின்பு மூன்று டம்ளர் நீர் ஊற்றி குழம்பை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்கு கொதித்ததும் அதில் மசால் வடைகளை உள்ளே போட வேண்டும்.
வடை குழம்பிலுள்ள நீரைக் குடித்து விடும்.குழம்பு போதுமான அளவு கெட்டியானதும் மல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கி வைக்க வேண்டும்.
இப்போது சூடான மணமான மசால் வடைக் குழம்பு தயார்.இந்த மசால் வடைக் குழம்பை, சாதத்திற்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
அதை விட இட்லி, தோசை, சப்பாத்தி,பூரி, ஆப்பம், இடியாப்பம் மற்றும் புரோட்டா ஆகியவற்றிற்குப் பொருத்தமான குழம்பு என்றால் அது மசால் வடைக் குழம்புதான்.
மருத்துவக் குணங்கள்:
கடலைப் பருப்பில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது.
இவற்றை உண்பதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன.
இவை கண், இதயம், மூளை ஆகியவற்றை நன்கு வளரச் செய்கின்றன.
இவை எலும்புகளுக்கு வலுவூட்டுகின்றன.
புகழ்பெற்ற உணவு தானியம் என்றால் அது கடலைப் பருப்புதான்.
அவை அதிகம் பிரபலமானது இந்தியாவில்தான்.

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors