மசாலா மீன் குழம்பு|masala meen kuzhambu

தேவையான பொருட்கள் :

மீன்       –    1 கிலோ
சிறிய வெங்காயம்    –  1 கப்
பூண்டு     –  10 பல்
வெந்தயம்   –  1/4  ஸ்பூன்
கறிவேப்பிலை கொஞ்சம்
கடுகு        –  1ஸ்பூன்
மஞ்சள்     –   1/2  ஸ்பூன்
உப்பு  தேவையான அளவு
நல்லெண்ணை      –  1 கப்
புளி  2 எலுமிச்சை அளவு

மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள்  :

 

masala meen kuzhambu,cooking tips in tamil masala meen kuzhambu,masala meen kuzhambu recipe in tamil,masala meen kuzhambu seivathu eppadi

தேங்காய்      –   1
வரமிளகாய்    –   20
கொத்தமல்லி    -1 கை அளவு
கடலை பருப்பு      –  2 ஸ்பூன்
சீரகம்              –  1 ஸ்பூன்
மிளகு        – 1/2 ஸ்பூன்
வெந்தயம்    –  1/4 ஸ்பூன்
பூண்டு      –  10 பல்
சின்ன வெங்காயம்    – 20
கறிவேப்பிலை கொஞ்சம்  இவை  அனைத்தையும்  எண்ணை  விட்டு  நன்றாக  வருத்து  அரைத்து கொள்ளவும் .

செய்முறை :

வாணலியில்  எண்ணை  விட்டு  அது  காய்ந்ததும்  அதில்  கடுகு  வெந்தயம் , கறிவேப்பிலை , வெங்காயம் , பூண்டு  போட்டு  வதக்கி  அதில்  அரைத்த  மசாலா ,மஞ்சள்தூள் , உப்பு , புளி தண்ணீர் , கொஞ்சம் வெல்லம் , இவை அனைத்தையும் போட்டு  கொஞ்சம்  தண்ணீர் விட்டு  நன்றாக  கொதிக்கவிடவும் . குழம்பு  நன்றாக  கொதித்து  தீக் ஆனவுடன்  அதில்  மீனை  போட்டு  இரண்டு  கொதி வந்தவுடன்  அடுப்பை சிம்மில்  5 நமிடம்  வைத்திருந்து  இறக்கவும் .   [ குறிப்பு : மசாலா  வருக்கும்  போது கடைசியாக  தான்  தேங்காய்  போட வேண்டும் . தேங்காய்  போட்டு  2  நிமிடம்  வதக்கினால்  போதும். ]

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors