மசாலா பருப்பு வடை|masala paruppu vadai in tamil

தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
சோம்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலைப் பருப்பை 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கழுவி, ஒரு டேபிள் ஸ்பூன் பருப்பை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, மீதமுள்ளவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைக்கும் போது தண்ணீரை பார்த்து ஊற்ற வேண்டும். அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். பின்னர் அந்த அரைத்த பருப்புடன், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், மிளகு மற்றும் உப்பு சேர்த்து, மீண்டும் ஒரு முறை அடித்துக் கொள்ள வேண்டும்.

masala paruppu vadai,masala paruppu vadai recipe in tamil,cooking tips masala paruppu vadai tamil nadu

நன்கு கெட்டியாக ஆனதும், அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மீதமுள்ள கடலைப் பருப்பை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கையில் லேசாக தண்ணீரை தடவிக் கொண்டு, அந்த மாவுக் கலவையை எடுத்துக் கொண்டு, வட்டமாக தட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான மசாலா பருப்பு வடை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Categories: Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors