மசால் வடை|masala vada recipe tamil samyal kurippu

masala vada recipe in tamilதேவையானவை:

 1. கடலைப்பருப்பு – 1 கப்,
 2. சின்ன வெங்காயம் – அரை கப்,
 3. புதினா – சிறிது,
 4. மல்லித்தழை – சிறிது,
 5. கறிவேப்பிலை – சிறிது,
 6. உப்பு – ருசிக்கேற்ப,
 7. எண்ணெய் – தேவையானது.

அரைக்க:

 1. இஞ்சி – 1 துண்டு,
 2. பூண்டு – 2 பல்,
 3. பச்சை மிளகாய் – 2,
 4. காய்ந்த மிளகாய் – 1,
 5. சோம்பு – அரை டீஸ்பூன்,
 6. பட்டை, லவங்கம், ஏலம் – தலா 2.

 

செய்முறை:

பருப்பை 2 மணி நேரம் ஊற விடுங்கள். பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, 1 டேபிள்ஸ்பூன் பருப்பை தனியே வைத்துவிட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கரகரப்பாக அரைத்தெடுத்து மாவுடன் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, தனியே எடுத்து வைத்த பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு, நடுத்தர தீயில் மொறு மொறுப்பாக வேக விட்டு எடுங்கள்.

Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors