மெதுவடை|medhu vadai in tamil

தேவையானப் பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
அரிசி – 1/2 ஸ்பூன்
உப்பு – 1/2 ஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் – 2
எண்ணை பொரிப்பதற்கு

Medhu Vadai in tamil ,Medhu Vada Uzhundu Vada samayalkurippu,Medhu Vada seivathu eppide,Medhu Vada Uzhundu Vada recipe in tamil
செய்முறை:

உளுந்தை நன்றாக் கழுவி, தண்ணீரை வடித்து அதில் உப்பு, இஞ்சி சேர்த்து, கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும், அதே சமயம், கையில் எடுத்தால் லேசாகவும் இருக்க வேண்டும். சிறிது மாவை எடுத்து, தண்ணீரில் போட்டால், மாவு தண்ணீரில் மிதக்க வேண்டும். அதுதான் சரியான பதம்.

பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
எண்ணையை வாணலியில் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்ததும், கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்தவும். பின் அதன் நடுவில், ஒரு துளை செய்து எண்ணையில் போட்டு பொன்னிறமாக்ப் பொரித்தெடுக்கவும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors