மிளகாய் சட்னி|milagai chutney in tamil

Loading...

தேவையானவை:

  • வரமிளகாய் – 10 – 12
  • பூண்டு – 4 பல்
  • சின்ன வெங்காயம் – 10 – 15
  • தக்காளி – 2
  • புளி – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

 

milagai chutney in tamil ,milagai chutney samyal kurrippu

செய்முறை:

  • தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  • சிறிது நேரத்தில், மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  • எண்ணை வெளியில் வரும்வரை வதக்கினால் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எங்கேப்பா நேரம்னு நீங்க சொல்றது கேக்குது :))அதனால், ஓரளவு பச்சை வாடை நீங்கினால் போதும்.
  • நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான மிளகாய் சட்னி ரெடி.

குறிப்பு: தாளித்தவுடன், நன்கு அறிந்த சிறிது பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கினால், சுவை மேலும் அதிகரிக்கும். சட்னி அளவும் கூடும் … 🙂

Loading...
Loading...
Categories: Chutney Recipes Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Recent Recipes

Sponsors