மிளகு வடை|milagu vadai recipe in tamil

தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
மிளகு – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

உளுத்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு வைக்கவும்.

மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

pepper vadai in tamil,milagu vadai recipe in tamil,milagu vadai samayal kurippu,milagu vadai recipe in tamil nadu style

மிக்ஸியில் உளுத்தம் பருப்பை போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும்.

ஒரு சுத்தமான ஈரத்துணியில், ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வைத்து, மெல்லிய வடையாகத் தட்டவும். வடையை துணியிலிருந்து கவனமாக எடுத்து, காய்ந்த எண்ணையில் போட்டு, அரை வேக்காடாகப் பொரித்தெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே பொரித்தெடுக்கவும். பின்னர், மீண்டும் 4 அல்லது 5 பொரித்த வடைகளை எண்ணையில் போட்டு, நன்றாக சிவக்கும் வரை பொரித்தெடுக்கவும்.

Loading...
Categories: Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors