மில்க் அல்வா|milk halwa samayal kurippu

மில்க் அல்வா2

தேவையானவை:

பால் – 4 கப், சர்க்கரை – 2 கப்,
நெய் – 1 கப், ரவை – அரை கப்,
சீவிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் கலர் – ஒரு சிட்டிகை.
milk halwa in tamil,milk halwa samayal kurippu,milk halwa recipe cooking tips in tamil
செய்முறை:

சிறிய கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, சீவிய பாதாமை லேசாக வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, மேலே சொல்லியிருக்கும் மற்ற பொருள்களை எல்லாம் ஒன்றாகக் கலந்து, அடி கனமான பாத்திரம் ஒன்றில் சேர்த்து, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள்.

இந்தக் கலவை சற்று சேர்ந்து வரும்போது, நெய் பிரியும். அப்போது தீயைக் குறைத்து, கலவை நன்கு சுருண்டு வரும்வரை விடாமல் கிளறி… கடைசியில், வறுத்து வைத்திருக்கும் பாதாமை சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.

இதைத் தட்டில் பரப்பி, வில்லை களாகவும் போடலாம். ஸ்பூனில் எடுத்தும் பரிமாறலாம். குறிப்பு: ஒரு கப் அளவு என்பது 200மிலி அல்லது 200 கிராம் அளவைக் குறிக்கும்.

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors