முகப்பருக்களால் வரும் கரும்புள்ளிகள் தழும்புகள் மறைய ஆயுர்வேத மருத்துவம்|mugaparu ayul vetham tips in tamil

முகப்பருவால் வரும் கரும்புள்ளிகள் அகல பல மூலிகைகள் உதவுகின்றன. இவைகள் பக்க விளைவுகள் அற்றது. மூலிகைகளை கொண்டு எவ்வாறு கரும்புள்ளிகளை அகற்றலாம் என்று பார்ப்போம்.

• ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து தயிர் சமமாகக் கலந்தால் கிரீம் போல் ஆகும். ஆதை முகத்தில் பூசி சுமார் பதினைந்து நிமிடம் கழித்து வெந்நீரில் முகத்தை கழுவ கரும்புள்ளிகள் மெல்ல மறையும். இதனை தொடர்ந்து ஒரு வார காலம் செய்யலாம்.

mugaparu ayul vetham tips in tamil

• ஜாதிக்காய் அனைவரும் நன்கு அறிந்ததே அதனை நான்கு மணி நேரம் சுத்தமான நீரில் ஊற வைத்து பின் அதனை நன்கு அரைக்கவேண்டும். இந்த கலவையை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் பூசி ஒரு மணி நேரம் விட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர கரும்புள்ளிகள் மறையும்.

• முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின் இரவில் படுக்கப்போகுமுன் இரண்டு ஸ்பூன் கறிவேப்பிலை சாற்றில் அரை ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து கரும்புள்ளிக்ள மற்றும் வடுக்களின் மீது தடவி வர குணம் காணலாம்

• முள்ளங்கிச் சாறை சம அளவு மோருடன் கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வர கரும்புள்ளி படிப்படியாக மறையும்.

• அதிமதுரம் – 30 கிராம், தாமரைக் கிழங்கு – 30 கிராம், அல்லிக் கிழங்கு – 30 கிராம், அருகம்புல் – 30 கிராம், வெட்டிவேர் – 30 கிராம், சடாமாஞ்சில் – 30 கிராம், மரமஞ்சல் – 30 கிராம் இவைகளை நுண்ணிய பொடியாக்கி வைத்துக் கொண்டு தண்ணீரில் கலந்து கரும்புள்ளிகளின் மீது பூசி வர அவை குணமாகும்.

• பாதாம்பருப்பு பொடி ½ ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு ½ ஸ்பூன் இவைகளை ஒன்று சேர்த்து பேஸ்ட் போலாக்கிக் கொள்ளவும். அந்தக் கலவையை குளிக்கச் செல்வதற்கு ½ மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேய்த்துக் கொண்டு ஊற விடவும். பின்னர் சுத்தமான நீரில் குளிக்கவும். இவ்வாறு தினமும் தொடர்ந்து 15 நாட்கள் செய்தால் கண்டிப்பாக கரும்புள்ளி, வடுக்கள் மறையும்.

Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors