முள்ளங்கி கீரை பொரியல்|mullangi keerai poriyal in tamil

தேவையான பொருட்கள் :

முள்ளங்கி கீரை                                     1 கட்டு
பெரிய வெங்காயம்,                            ஒன்று பொடியாக அரியவும்.
சிகப்பு மிளகாய்                                      1 அல்லது 2
காரட் பொடியாக அரிந்தது               1  டீஸ்பூன்
கடுகு                                                            1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு                                   1 டீஸ்பூன்
தேங்காய் துருவல்                               2 டீஸ்பூன்
எண்ணெய்                                               1 டீஸ்பூன்  
செய்முறை :

கீரையை சுத்தம் செய்து தண்டு பகுதியை தனியாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
கீரையையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடேறியதும் கடுகை வெடிக்க விடவும்.

 

mullangi keerai poriyal,mullangi keerai poriyal cooking tips tamil,samyal kurippu mullangi keerai poriyal,mullangi keerai fry tamil
அதன் பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் சிகப்பு மிளகாயை உடைத்து சேர்க்கவும்.
பருப்பு சிவந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு வெட்டி வைத்துள்ள தண்டு பகுதியை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
பின்னர் கீரையையும் காரட் துண்டுகளையும் சேர்த்து சில மணித்துளிகள் வதக்கவும்.
பிறகு உப்பு சேர்த்து கிளறி மூடி கீரை வேகும் வரை சிறிய தீயில் வைத்திருக்கவும்.

கீரை பச்சை நிறம் மாறாமல் வேக வைக்கவும்.
வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்.
தண்ணீர் சுண்டும் வரை தீயை அதிகப் படுத்தி விடாமல் கிளறி இறக்கவும்.
பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

ரசம் மற்றும் சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ஏற்ற பொரியல்

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors