முள்ளங்கி சாம்பார்|mullangi sambar in tamil

தேவையான பொருள்கள் –
துவரம் பருப்பு – 100 கிராம்
காயம் – 1/4 தேக்கரண்டி
முள்ளங்கி – 1
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
புளி – சிறிய கோலி அளவு
சாம்பார் பொடி – 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க –

எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் – 1/4 பங்கு
கறிவேப்பிலை – சிறிது
Mullangi Sambar,mullangi sambar tamil style,mullangi sambar samyal,cooking tips mullangi sambar

செய்முறை –

குக்கரில் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, காயம் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கியை தோலுரித்து வட்டமாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முள்ளங்கி, தக்காளி, மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
நன்கு வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
மசாலா வாடை அடங்கியதும் அவித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து கலக்கவும். சாம்பார் நுரை கூடி வரும் போது மல்லித்தழை சேர்த்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து சாம்பாரில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors