முட்டை கொத்து பரோட்டா|muttai kothu parotta

Loading...

தேவையான பொருட்கள்
பரோட்டா – 5
முட்டை – 3
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 2
தக்காளி – 1
கருவேப்பிலை – 15 இலைகள்
பச்சை மிளகாய் – 2
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
சால்னா / சிக்கன் குழம்பு/ மட்டன் குழம்பு – 1/2 கப்

muttai parotta,muttai kothu parotta in tamil ,muttai kothu parotta seivathu eppadi,muttai kothu parotta cooking tips
செய்முறை
பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக ஒன்றிரண்டாக பிய்த்துக் கொள்ளவும்.
தக்காளியை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்.
ஒரு இரும்பு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். எண்ணெய் சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
ஒன்றிரண்டாக நசுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
வதக்கிய பொருட்களின் நடுவில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இறுதியாக மட்டன் குழம்பை ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.
கடைசியாக பிய்த்து வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து கலக்கி, இரண்டு இரும்பு கரண்டிகளை வைத்து பரோட்டாவை நன்கு கொத்திக் கலக்கி, சூடாக பரிமாறவும்.

Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors