நண்டுக் கறி|nandukari samyal kurrippu

நண்டு 1கிலோ
வெங்காயம் 3
தக்காளி 2
பச்சைமிளகாய் 5
கொத்தமல்லி
இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
கரம் மசலா 1 ஸ்பூன்
சீரகம் சோம்புதூள் 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
தேங்காய் துருவல். 3/4 கப்
பாதாம்பருப்பு 15.20
பட்டை -லவங்கம்
உப்பு
ஆயில்
நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து இரண்டு துண்டாக போட்டுக்கொள்ளவும்.

nandukari,crab curry in tamil

தக்காளி. வெங்காயம்.பச்சைமிளகாய் நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.சட்டியில் ஆயில் விட்டு அது சூடானதும், பட்டை லவங்கம் போட்டு அதில் நறுகிய வெங்காயம்,தங்காளி பச்சைமிளகாய். வதங்கியதும்,இஞ்சிப்பூண்டு பேஸ்டையும், மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கவும்.அதுவும் வதங்கி வாசனை வந்ததும். பின்பு நண்டை அதனுடன் சேர்த்து சற்று பிரட்டி. பின்பு மசாலக்களை தண்ணீர்விட்டு கரைத்து அதனுடன் சேர்த்து கொத்தமல்லியில் பாதியை அந்த கலவையுடன் சேர்த்து உப்பிட்டு மூடவும்.

கொதித்து வாசனை வந்ததும் திறந்து,பாதாமுடன் தேங்காப்பூவையும்போட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்த விழுதை அதந்த நண்டுடன் சேர்த்துகிளறி சற்று வைத்திருந்துவிட்டு மீதமுள்ள கொத்தமல்லி தூவி இறக்கவும்.

நண்டுக்கறி ரெடி

Loading...
Categories: Chef Dhamu Samyal In Tamil, Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors