பகோடா மோர்க் குழம்பு|pakoda mor kuzhambu

வேண்டியவைகள்
பகோடா தயாரிக்ககடலைமாவு—-6 டேபிள் ஸ்பூன்
பெறிய வெங்காயம் —1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய்ப் பொடி—-கால் டீஸ்பூன்
உப்பு—-கால் டீஸ்பூன்
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
மோர்க் குழம்பிற்கு வேண்டியவைகள்
கெட்டியான மோர்——3 கப்பிற்கும் மேல்
கடலைப் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
தனியா—-2 டீஸ்பூன்
கடுகு—-1 டீஸ்பூன்
பச்சைமிளகாய்—–3
வற்றல் மிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, சிறிது பெருங்காயம்
மஞ்சள்ப் பொடி—–சிறிது
ருசிக்கு—-உப்பு

pakoda mor kuzhambu in tamil

செய்முறை
கடலைப்பருப்பு,தனியா.கடுகை ஊரவைத்து பச்சைமிளகாய்,
தேங்காய்த்துருவல்,வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
திட்டமாக ஜலம் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து
கரைத்து வைக்கவும்.
கடலைமாவுடன், நறுக்கிய வெங்காயம்,உப்பு, மிளகாய்ப்பொடி
சேர்த்துக் கலந்து ஜலம் விட்டுத் தளரப் பிசைந்துகொள்ளவும்.
சற்று லூஸாக இருக்கட்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக், கலந்த மாவை
பகோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப்
பொறித்தெடுக்கவும். ஷேப்பைப் பற்றிக் கவலை வேண்டாம்.
மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி
மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
பொறித்தெடுக்கும் போதே பகோடாக்களைக் குழம்பில் சேர்த்து
விடவும்.
நல்ல பால் பொங்குவதுபோல் நுறைத்து வரும்போது கிளறி
தீயை மட்டுப்படுத்தி இரண்டு நிமிஷங்கள் மேலும்
வைத்திருந்து குழம்பை இறக்கவும்.
கடுகு, பெருங்காயம் தாளித்து மூடி வைக்கவும்.
பகோடா மிருதுவாக ஆகி, குழம்பும் சாப்பிட தயாராகிவிடும்.
இருக்கவே இருக்கிறது கொத்தமல்லி,கறிவேப்பிலை.
மேலே தூவுங்கள். காரம் அதிகரிக்க மிளகாயை தாளிப்பில்
சேர்க்கவும்.
வேண்டுமானவைகளுடன் சேர்த்து உண்ணலாம்.

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors