கீரை பருப்பு கடைசல்|paruppu keerai kadaiyal in tamil

Loading...

தேவையானப்பொருட்கள் :

1. துவரம் பருப்பு : 100 கி
2. அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை – இதில் ஏதாவது ஒன்று ஒரு கட்டு.
3. வெங்காயம் -1
4. பூண்டு – 4 பல்
5. தக்காளி -1
6. பச்சைமிளகாய் – 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க – சிறிது வடவம் & பெருங்காயம்
9. எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

Keerai-Dhal-Masiyal,paruppu keerai kadaiyal
செய்முறை :

கீரையை ஆய்ந்து நன்றாக கழுவி, பின்பு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கியப்பின் கழுவக்கூடாது. துவரம்பருப்பை மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், அதில் நறுக்கிய கீரையைப்போட்டு, கீரை வெந்தவுடன் (பச்சைநிறம் மாறிவிடாமல்) உப்புப்போட்டு கலக்கி இறக்கி, கீரைக்கடையும் சட்டியில் கொட்டி, நன்கு கடைந்து கடைசியாக வடவம் + பெருங்காயம் தாளித்துக்கொட்டி அதையும் லேசாக கடைந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors