பருப்பு சாம்பார் |paruppu sambar recipe in tamil

Loading...

தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் புளி தண்ணீர் – 1/2 கப் மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை கழுவி குக்கரில் போட்டு, 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் தக்காளியைப் போட்டு,

paruppu sambar samayal kurippu,paruppu sambar in tamil recipe,paruppu sambar seivathu eppadi,paruppu sambar cooking tips in tamil

 

 

மூடி, 2-3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும், அதில் உள்ள நீரை ஓரளவு வடிகட்டி, வேக வைத்த பருப்பு மற்றும் தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஓரளவு கடைந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் மற்றும் உப்பை போட்டு வதக்கவும். வதங்கியதும், அதில் கடைந்து வைத்துள்ள பருப்பை போட்டு ஒரு முறை கொதிக்க விடவும். பின்னர் அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து, வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். (அதிகமாக தண்ணீர் ஊற்றி விட வேண்டாம். ஏனெனில் இன்னும் புளித் தண்ணீர் உள்ளது.) பச்சை வாசனை போனதும், அதில் புளியை ஊற்றி, உப்பு அளவை சரிபார்த்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவவும். இப்போது சுவையான பருப்பு சாம்பார் ரெடி!!!

Loading...
Loading...
Categories: Saiva samyal, Sambar Recipe in tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors