பீர்கங்காய் கூட்டு|peerkangai kootu in tamil

தேவையான பொருட்கள்:
 1. பீர்கங்காய் – 2
 2. துவரம்பருப்பு-1/4 கப்
 3. பாசிபருப்பு-1/2 கப்
 4. வெங்காயம்-1
 5. தக்காளி-1
 6. பச்சைமிளகாய் -2
 7. இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
 8. சீரகம்- 1/4ஸ்பூன்
 9. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
 10. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
 11. தனியாதூள்-1/2 ஸ்பூன்
 12. உப்பு-1/2 ஸ்பூன்
 13. எண்ணெய்-2 ஸ்பூன்
 14. கருவேப்பிலை-சிறிது
 15. கடுகு-1/4 ஸ்பூன்

masiyal,peerkangai kootu,samyal kurippu peerkangai kootu,peerkangai kootu cooking tips in tamil,tamil recipe peerkangai kootu

செய்முறை:
குக்கரில்  பாசிபருப்பு, துவரம்பருப்பு, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
பின் குக்கரை திறந்து அதில் தோல் சீவி, கொட்டை நீக்கி வெட்டி வைத்துள்ள பீர்கங்காய், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1 விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வேகவைத்ததை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். இப்பொழுது பீர்கங்காய் கூட்டு ரெடி.
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors