புதினா சப்பாத்தி |pudina chapati cooking tips in tamil

Loading...

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) புதினா – 1 கப் (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகப் பொடி, பெருங்காயத் தூள்,

 

pudina chapati recipe in tamil,pudina chapati cooking tips tamil recipe,pudina chapati seivathu eppadi,pudina chapati samayal kurippu

இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தாளித்து, பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்க வேண்டும். பின்பு சப்பாத்தி மாவை சிறு உருண்டைகளாக்கி, பின் ஒரு உருண்டையை எடுத்து தேய்த்து, அதன் நடுவே வதக்கி வைத்துள்ள கலவையை சிறிது வைத்து, நான்கு புறமும் மடக்கி, மீண்டும் ஒருமுறை தேய்க்க வேண்டும். இதேப்போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும். இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான புதினா மல்லி சப்பாத்தி ரெடி!!

Loading...
Loading...
Categories: Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors