ராகி வடை|ragi vadai in tamil

தேவையான பொருட்கள்
 • ராகி மாவு –  2 கப்
 • மிளகாய்த்தூள் – 1 மேசைக்கரண்டி
 • பெரிய வெங்காயம் –  1
 • வேர்க்கடலை – 2  மேசைக்கரண்டி
 • கருவேப்பில்லை –  2 கொத்து
 • உப்பு  –  தேவையான அளவு
 • எண்ணெய் – பொரிப்பதற்கு

ragi vadai,ragi vadai recipe,ragi vadai samayal kurippu,ragi vadai cooking tips in tamil

செய்முறை
 1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 2. வேர்க்கடலையை சிறிய துண்டுகளாக பொடித்துக் கொள்ளவும்.
 3. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர, மீதமுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலக்கிக் கொள்ளவும்.
 4. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.மாவு பதம் சப்பாத்தி மாவு பதத்தை விட லூசாக இருக்க வேண்டும்.
 5. கடையில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சிறிது சிறிது மாவாக எடுத்து கையில் தட்டி(வடை தட்டுவது போல ) , எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
 6. வடை பொரிந்தவுடன் எடுத்து விடலாம் அல்லது  வடையில் போட்டிருக்கும் வேர்க்கடலை லேசாக சிவந்தவுடன் எடுத்து  விடலாம்.
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors