ரிப்பன் பக்கோடா|Ribbon Pakoda in Tamil

தேவையானவை:

 • அரிசி மாவு – 1 1/2 கப்
 • கடலை மாவு – 1 கப்
 • உப்பு – தேவையான அளவு
 • வெண்ணை – 2 டீஸ்ப்பூன்

அரைத்துக் கொள்ள:

 • வர மிளகாய் – 4
 • பூண்டு – 6 பல்
 • இஞ்சி – சிறிய துண்டு
 • பெருஞ்சீரகம் – 1/4 டீஸ்ப்பூன்

Ribbon Pakoda in tamil cooking

செய்முறை:

 • அரைத்துக் கொள்ள வேண்டியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 • அரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
 • அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணை ஆகியவற்றுடன் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து பிசையவும்.
 • வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவினை இட்டுப் பிழியவும்.
 • பிழியும் போது ஒன்றன் மேல் ஒன்று விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • சற்று நேரத்தில் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் போது எடுக்கவும்.
Loading...
Categories: Chettinad Recipes Tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors