கார்ன் சப்பாத்தி | chapathi seivathu eppadi

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் சோள மணிகள் – 1 கப் (வேக வைத்து மசித்தது) வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து மசித்தது) சீரகப் பொடி – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 1 கப் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, ஈரத்துணியால் மூடி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,

 

chapathi seimurai, chapathi recipe in tamil, chapathi tamil nadu, chapathi cooking tips in tamil , chapathi easy tips tamil

 

வெங்காயத்தை சேர்த்து தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய், சீரகத் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும். அடுத்து ஊற வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். பின் ஒரு உருண்டையை எடுத்து, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே குளிர வைத்துள்ள கார்ன் கலவையை சிறிது வைத்து மூடி, மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான கார்ன் சப்பாத்தி ரெடி!!!

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors