பிரிஞ்சி|Brinji Rice in tamil

தேவையானவை:

பாசுமதி அரிசி – 2 கப்,

பெரிய வெங்காயம் – 2 கப்,

தக்காளி – 3,

பச்சை மிளகாய் – 4,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,

புதினா, மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி,

தேங்காய்ப்பால் – 2 கப்,

உப்பு – தேவையான அளவு,

இஞ்சி + பூண்டு விழுது – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,

பிரெட் – 2 ஸ்லைஸ்.

தாளிக்க:

நெய் – 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,

பட்டை, லவங்கம்,

ஏலக்காய் – தலா 2,

சோம்பு – அரை டீஸ்பூன்,

பிரிஞ்சி இலை – 2.

Brinji Rice in tamil,cooking tips Brinji Rice in tamil,samyal kurippu Brinji Rice,Brinji Rice recipe tamil nadu style

செய்முறை:

அரிசியைக் கழுவி, ஒரு கப் தண்ணீர் + 2 கப் தேங்காய்ப்பாலில் ஊறவையுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி + பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள், புதினா, மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

ஊறவைத்த அரிசியை அப்படியே தண்ணீர், தேங்காய்ப்பாலுடன் சேர்த்து உப்பு போடுங்கள். சற்று புளிப்புச் சுவை விரும்புபவர்கள், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறு அல்லது கால் கப் தயிர் சேர்த்துக் கிளறி, மூடிவைத்துவிட்டு, ஒரு விசில் வந்ததும், தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்கி, பிரெட் துண்டுகளை எண்ணெயில் வறுத்துப் போட்டு கிளறி இறக்குங்கள்.

Categories: Biryani Recipes Tamil, Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors