சேமியா உப்புமா|semiya upma in tamil

உங்களுக்கு சேமியா உப்புமாவை மிகவும் சுவையாகவும், சிம்பிளாகவும் செய்யத் தெரியுமா? இல்லாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை சேமியா உப்புமாவை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுத்துள்ளது. மேலும் இந்த சேமியா உப்புமாவை சர்க்கரை அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த சிம்பிளான சேமியா உப்புமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சேமியா – 1 பாக்கெட் வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை பட்டாணி – 1/2
கப் கேரட் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன் உ
ளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்

semiya upma in tamil,samyal kurippu semiya upma,tamil recipe semiya upma
செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அத்துடன் மஞ்சள் தூள், கேரட், பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து 5-6 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும். பிறகு அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 8-10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கினால், சேமியா உப்புமா ரெடி!!!

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors