காளான் சமோசா|kalan samosa in tamil

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 1 1/2 கப்

உப்பு – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

உள்ளே வைப்பதற்கு… வெங்காயம் – 1 (நறுக்கியது)

பட்டன் காளான் – 300 கிராம் (பொடியாக வெட்டியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி – 1/2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

 

samosa samyal,kalan samosa in tamil,samosa recipe tamil naadu

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் சமோசாக்களாக செய்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான காளான் சமோசா ரெடி!

Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors