மணப்பெண்ணிற்கேற்ற மனங்கவரும் திருமண நகைகள்|tamil wedding jewelry tips in tamil

இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற பெரும்பாலான திருமண வைபங்களில் மணமகள் அலங்காரம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதில் மணமகளை கூடுதல் பொலிவாய், ஜொலிக்கும் தோற்றமாய் மின்ன வைப்பை அவர் அணியும் நகைகள் தான்.

திருமண நகைகள் என்பவை அதிகபட்சமான அழகிய வேலைப்பாடு மற்றும் பெரிய மாந்தமான தோற்றத்துடன் உருவாக்கப்படுகின்றன. திருமண நகைகளின் வடிவமைப்பு மற்றும் உருவ அமைப்பு இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. இருப்பினும் திருமண நகைள் எனும் போது கழுத்தில் அணியும் நெக்லஸ் அதே வடிவமைப்புடன் கூடிய அழகிய காதணி, தலையில் அணியும் நெத்தி சுட்டி, வளையல்கள், மோதிரம் போன்றவை உள்ளன. மேலும் வங்கி, ஒட்டியாணம், சூரிய பிரபை, சந்திரபிரபை போன்றவையும் ஆடம்பர திருமண வைபவங்களில் தங்கத்தில் மணமகள் அலங்காரத்திற்கு அணியும் நகைகளாக உள்ளன.

 

tamil wedding jewelry tips in tamil

மணமகள் நகைகள் கலேக்ஷனில் ஒரே வடிவமைப்புகள் கூடிய நெக்லஸ், காதணி, மோதிரம், நெத்தி சுட்டி போன்றவை பிரதான இடம் பிடிக்கின்றன. மணப்பெண் நகைகளில் கண்கவரும் கழுத்து பிரதேசத்தில் அமரும் நெக்லஸ் மற்றும் சோக்கர் அனைவரையும் கவரும் வகையில்  இருத்தல் வேண்டும். அந்த வகையில் பார்த்தவர் பிரமிப்பும், கண்டவர்கள் மயங்கும் விதத்தில் அதிக அற்புதமான தாமரை மலர் சோக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. கழுத்துடன் நெருக்கமாய் இணைந்திடும் இந்த சோக்கர் நகையில் பெரிய தாமரை பூ விரிந்தவாறு உள்ளது.

மேல் பெரிய இதழ்கள், கீழ் சிறிய இதழ்கள் அதற்கு கீழ் சிறிய இலைகள் மணியாக தொங்குகின்றன. தாமரை பூவிதழ் இடைவெளியில் அழகிய வண்ண எனாமல் செய்யப்பட்டுள்ளது. தடாகத்தில் பூக்க வேண்டிய தாமரை மணமகள் கழுத்தில் தங்கத்தில் பூத்திருப்பதை பார்ப்பவர்கள் வியந்திருவர். நெக்லஸ், காதணி, வளையல் மூன்றும் வண்ண மலர்கள் பூத்திருப்பது போன்ற செட் நகையாக திருமண நகையாக விற்பனைக்கு வந்துள்ளது. நெக்லஸ் பகுதியில் பாதி சிப்பியின் மேல் அமையும், பாதி பகுதியில் ஏழு வண்ணமயமான மலர்கள் எனாமல் கற்கள் பதியப்பட்டவாறு உருவாக்கப்பட்டுள்ளன.

காதணியில் அதே பூக்கள் இரண்டு உள்ளன. மேற்புறம் சிவப்பு நிற பாதி பூவும் நடுவில் விரிந்த வெள்ளை பூ அதன் கீழ் மணிகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அதே வண்ணமயமான பூக்கள் பொருந்தியபட்டையான வளையல். இதில் சிவப்பு நிற பூக்கள் எனாமல் செய்யப்பட்டுள்ளன. திருமண செய் நகைகளில் அழகிய வடிவமைப்பு கூடுதல் கலைநயம் மற்றும் துல்லியமான நேர்த்தியுடன் உருவாக்கப்படுகின்றன. அதனை அணியும் மணப்பெண் தங்க மலர் சோலையில் மிதந்து வருவது போன்று இருப்பார்.

பிரைடல் நகைகள் என்ற இணை நகைகளில் மனமயக்கும் மயில் உலா வருவது கூடுதல் அழகை தருகிறது. இதில் இருபக்கமும் மேற்புறம் மயில் தொங்குவது போன்று நடுவில் தங்க மணி உருளைகள் ஏழு அடுக்காய் தொங்குவது போன்ற ஆரம். இதில் மயில் கழுத்தில்இருபுறம் வண்ணமாய் மேற்புறத்தில் தோகை விரித்தாடும். அதற்கேற்ற அற்புதமான எனாமல் வண்ண பூச்சு. மயில் தொங்குவது போன்று மேற்புறம் சூரிய காந்தி மலர் இணைந்த காதலணி கலைநயத்தின் உச்சம் எனலாம்.

அதே போன்று பெரிய மயில் தோவை விரித்து அமர்ந்து இருப்பது போன்ற கையில் அணியும் ஒற்றை வளையல் பிரமாதம். மணமகளுக்கு ஏற்ற நகை பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதால் சிறந்த வல்லூநர்களால் இலை உருவாக்கப்படுகின்றன. அதற்கேற்ப நகைகளில் வடிவமைப்பு அனைவரும் வியக்கும் வண்ணத்தில் உள்ளன.

Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors