தயிர் வடை|thayir vadai recipe in tamil

தேவையானப்பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு

தயிர் – 2 கப்

அலங்கரிக்க:

பச்சை கொத்துமல்லி தழை – சிறிது
காரட் துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
காராபூந்தி – 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்

 

thayir vadai recipe in tamil ,thayir vadai samayal kurippu,thayir vadai cooking tips tamil nadu style

செய்முறை:

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைத்து நன்றாக மை போல் அரைக்கவும். வழித்தெடுக்குமுன் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும். தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, இலேசாக விரல்களால் அழுத்தி நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பொரித்தெடுத்த வடையை குளிர்ந்த நீரில் போட்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து இலேசாக கைகளால் அழுத்தி அதிலுள்ள நீரை அகற்றி விட்டு தயிரில் போட்டு 20 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவும்.

பரிமாறும் முன் அதன் மேல் காராபூந்தி, காரட், கொத்துமல்லித் தழைத் தூவி பரிமாறவும்.

Categories: Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors