தேங்காய் மட்டன் குழம்பு|thengai mutton kulambu

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்யும் ஒரு சுவையான மற்றும் எளிமையான மட்டன் ரெசிபி தான் தேங்காயை அரைத்து செய்யப்படும் மட்டன் குழம்பு. இது மிகவும் சுவையாக இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்: மட்டன் – 500 கிராம், தேங்காய் – 1/2 கப் (துருவியது), வெங்காயம் – 2 (நறுக்கியது), தக்காளி – 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, சோம்பு – 1, டீஸ்பூன் பட்டை – 1, பச்சை ஏலக்காய் – 2, கிராம்பு – 3, கறிவேப்பிலை – சிறிது, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – 2 கப், கொத்தமல்லி – சிறிது
thengai mutton kulambu,thengai mutton kulambu recipe in tamil cooking tips ,thengai mutton kulambu samayal kurippu,thengai mutton kulambu tamil nadu style
செய்முறை: முதலில் மட்டன் துண்டுகளை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனைப் போட்டு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு, தக்காளி சேர்த்து மற்றொரு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை நீருடன் ஊற்றி, வேண்டுமெனில் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறினால், அருமையான தேங்காய் மட்டன் குழம்பு ரெடி!!!
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors