டிபன் சாம்பார்|tiffin sambar cooking tips in tamil

Loading...

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 1/4கப்
வெங்காயம் – பாதி
தக்காளி – 2 (மீடியம் சைஸ்)
பச்சை மிளகாய் – 1
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
மஞ்சள்தூள் – 1/2ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4ஸ்பூன்
புளிக்கரைசல் – 1/4கப்
சாம்பார்த்தூள் – 1 1/2ஸ்பூன்
சர்க்கரை – 1/2ஸ்பூன்
எண்ணெய் – 1ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது

செய்முறை
பருப்புடன் கால் ஸ்பூன் மஞ்சள்தூள், இரண்டு மூன்று சொட்டு எண்ணெய் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் – பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் கடுகு,சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து காய்ந்த மிளகாய், வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

tiffin sambar recipe in tamil,cooking tips tiffin sambar tamil,tiffin sambar samayal kurippu,tiffin sambar seimurai

பின்னர் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, புளிக்கரைசலை ஊற்றி, உப்பு மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

எல்லாம் நன்கு வெந்ததும் வெந்த பருப்பை நன்றாக மசித்து சாம்பாருடன் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் சாம்பார்த்தூள் சேர்த்து அடுப்பை குறைந்த சூட்டில் வைக்கவும்.

சாம்பார் நுரைக்கட்ட ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் லோ ஹீட்டில் வைத்து கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

கம-கம டிபன் சாம்பார் தயார்..இட்லி,தோசை,ஊத்தப்பம்,பொங்கல், உப்புமா, கிச்சடி இவற்றுக்கு பொருத்தமான ஜோடி இந்த சாம்பார்.

குறிப்பு
எப்பொழுதும் சாம்பார் பொடி சேர்த்ததும், நிறைய நேரம் சாம்பாரை கொதிக்க விடக் கூடாது.நுரைக் கட்ட ஆரம்பித்ததுமே அடுப்பிலிருந்து இறக்கிவிடவேண்டும்.
சாம்பார் கெட்டியாக இருக்காது. திக்காக வேண்டும் என்றால் தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொள்ளவும்.

இந்த முறை ஊரிலிருந்து சக்தி சாம்பார் பொடி வாங்கி வந்திருக்கிறேன்..என்னதான் எம்.டி.ஆர். சாம்பார் பொடி உபயோகித்தாலும் நம்ம ஊர் சாம்பார் டேஸ்ட் தனிதான்! 🙂 எம்.டி.ஆர்-ல பட்டை கிராம்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் கர்நாடகா சாம்பார் டேஸ்ட் வந்துடும்..அன்ன பூர்ணா சாம்பார் பொடி, சக்தி சாம்பார் பொடி இரண்டும் வாங்கி யூஸ் பண்ணிபாருங்க..உங்களுக்கே வித்யாசம் தெரியும்.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil, Sambar Recipe in tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors