தக்காளி பிரியாணி|thakkali biryani in tamil

தேவையானவை:

அரிசி – ஒரு கப்,

தக்காளி – 4,

பூண்டு – 4 பல்,

பச்சைமிளகாய் – 4,

பட்டை – 2 துண்டு,

கிராம்பு – 2,

சீரகம் – அரை டீஸ்பூன்,

ஏலக்காய் – 2,

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்),

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்,

உப்பு  – தேவையான அளவு,

கறிவேப்பிலை,மல்லித்தழை – சிறிது.

 

thakkali biryani,cooking tips thakkali biryani,samyal kurippu thakkali biryani,tomotto briyani recipe in tamil nadu style

செய்முறை:

அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும். தக்காளியைத் தனியாகவும், பூண்டு & பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை இவற்றுடன் பூண்டு & பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும். வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி மல்லித்தழை தூவி பரிமாறவும்.

Categories: Biryani Recipes Tamil, Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors