தக்காளி ரசம்|tomato rasam in tamil recipe

தேவையான பொருட்கள் ;
தக்காளி – பெரியது -5 ,
தண்ணீர் – முக்கால் லிட்டர்,
முழு மிளகு – 2 டீஸ்பூன்,
சீரகம் -ஒன்றரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் -கால்ஸ்பூன்,
பெருங்காயப்பொடி – கால்ஸ்பூன்.
பூண்டு -10 பல (தோலுடன்)
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
கடுகு -1டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 3 ,கருவேப்பிலை,
மல்லி இலை -சிறிது ,
உப்பு – தேவைக்கு.

tomato rasam,tomato rasam in tamil,cooking tips tamil tomato rasam,tomato rasamsamyal kurippu
செய்முறை:
தக்காளியை சிறியதாக நறுக்கி கைவிட்டு நொருங்க பிசைந்து வைக்கவும். முக்கால் லிட்டர் தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பு சேர்க்கவும். முழு மிளகு, முழு சீரகம், பூண்டு சேர்த்து பரபரவென்று தட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல் , கருவேப்பிலை தாளித்து இடித்து வைத்த மிளகு,சீரகம்,பூண்டு கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்க்கவும், சிறிது வதக்கவும். தக்காளி கரைசலை சேர்க்கவும்.தீயை மிதமாக வைக்கவும். நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.நுரை கூடி வரும்.அடுப்பை அணைக்கவும்.
கமகமக்கும் சுவையான தக்காளி ரசம் ரெடி.இதனை ப்லைன் சாதத்துடன் வெறும் பொரித்த வெங்காய முட்டையுடன் ,அப்பளத்துடன் சாப்பிட்டாலே அமோகமாக இருக்கும்.அப்படியே சூப் மாதிரியும் குடிக்கலாம்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors