தம் பிரியாணி|Dum Biryani Mutton cooking tips in tamil

Loading...

தேவையான பொருட்கள்

  • பாஸ்மதிஅரிசி – 1 கிலோ
  • பால் – 1/2 லிட்டர்
  • குங்குமப்பூ – 1 பின்ச்
  • உப்பு – சுவைக்கு
  • கிரேவிதயாரிக்க:
  • மட்டன் – 1 1/2 கிலோ
  • வெங்காயம் – 750கிராம்
  • நாட்டுத்தக்காளி – 500 – 600 கிராம்
  • தயிர் – 1/2 கப்
  • எலுமிச்சை – 1
  • இஞ்சிபூண்டுபேஸ்ட் – 100 கிராம்
  • புதினா – 1 கப்
  • மல்லித்தழை – 2 கப்
  • பச்சைமிளகாய் – 7
  • பாதாம் – 10
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
  • பட்டை – 2 துண்டு
  • கிராமபு – 8
  • ஏலம் – 8
  • உப்பு – சுவைக்கு
  • எண்ணெய் – 1/2 கப்
  • நெய் – 1/2 கப்
  • ரோஸ்வாட்டர் – 2 டேபிள்ஸ்பூன்

Dum Biryani Mutton in tamil,Dum Biryani Mutton samyal kurripu,Dum Biryani Mutton cooking tips tamil

செய்முறை

  • வெங்காயம், தக்காளி நீளமாக நறுக்கவும். புதினா, மல்லி சுத்தம் செய்து 1 1/2 கப் அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், பாதி அளவு நெய் விட்டு சூடேறியதும் பட்டை, கிராம்பு, ஏலம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பாத்திரத்தை மூடி விட்டால் நல்லது. வெந்து கொண்டிருக்கும் பொழுதே ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் சேர்க்கவும்.
  • பாதாம், காம்பு நீக்கிய பச்சைமிளகாய் இரண்டையும் சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
  • கலவை நன்கு வதங்கி வரும் பொழுது அரைத்த விழுது, மல்லி, புதினா, உப்பு ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
  • பிரஷர்குக்கரில் மட்டனை சுத்தம் செய்து போடவும். கூடவே 1 ஸ்பூன் ஜிஞ்சர் கார்லிக்பேஸ்ட், மசாலா தூள்வகைகள், தயிர், உப்பு அனைத்தையும் கலந்து 2 விசில் வைக்கவும்.
  • 2 விசிலுக்கு இறைச்சி வேகாவிட்டால் மூடியை எடுத்து விட்டு வேக விடவும். மட்டனும் வெந்து இருக்கவேண்டும். அதேநேரம் கிரேவியும் வற்றி இருக்கவேண்டும். இப்படி இறைச்சியை வேக வைக்கும் பொழுது நீர் சேர்க்கத்தேவையில்லை. தயிர் மட்டும் போதும்.
  • வற்றி, வெந்த இறைச்சியை வதக்கிய கலவையில் சேர்த்துக்கிளற வேண்டும்.
  • விஷேசங்களுக்கு பிரியாணி செய்வதாக இருந்தால் இந்த கலவையை முதல் நாளே தயார் செய்து ஆற விட்டு ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
  • ஒரு டம்ளர் அரிசிக்கு 1 1/4டம்ளர் தண்ணீர் தான் அளவு. 1கிலோ பாஸ்மதி சுமார் 6டம்ளர் வரும். 6டம்ளர் பாஸ்மதிக்கு (1கிலோ) 7 1/2 டம்ளர் நீர் தேவை.
  • பாலுடன் நீரும் கலந்து 7 1/2 டம்ளர் எடுத்துக்கொள்ளவும்.
  • இதில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய், எலுமிச்சைச்சாறு, குங்குமப்பூ, உப்பு கலந்து அரை மணிநேரம் ஊறிய அரிசியை சேர்த்து எலெக்டிரிக் ரைஸ் குக்கரில் வேக வைக்கவும்.
  • கீப்வார்ம் வந்ததும் சற்று நேரம் கழித்து வெந்த சாதத்தினை வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்.
  • அதே எலெக்ட்ரிக் குக்கர் பாத்திரத்தில் பட்டர் பேப்பர் விரித்து, சாதத்தினை பரவலாகப் போடவும்.
  • அதன் மேலே மட்டன் கிரேவியை பரவலாகப் போடவும்.
  • சாதம் மாற்றி, கிரேவி லேயர்லேயராக போட்டு மீதி இருக்கும் நெய்யை தெளித்து கரண்டியால் கிளறி விடவும். பன்னீரையும் சேர்த்து சாதம் நொருங்காமல் கிளறவும்.
  • மீண்டும் ஸ்விட்ச்சை ஆன் செய்தால் 10 நிமிடங்களில் கீப் வார்ம் வந்து விடும். கீப்வார்ம் மோடில் சுமார் 1- 2 மணிநேரம் தம்மில் வைக்கவும்.
  • அருமையான தம் பிரியாணி தயார். எவ்வளவு நேரம் தம்மில் வைக்கின்றோமோ அவ்வளவு தூரம் பிரியாணி சுவையாக இருக்கும்.
  • அதிக அளவு பிரியாணி செய்யும் பொழுது இந்த முறையில் செய்தால் நன்றாக பிரியாணி அமைந்து விடும்.
Loading...
Loading...
Categories: Biryani Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Rice Recipes In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors