வெஜிடபிள் குழம்பு |vegetables kulambu in tamil

Loading...

தேவைப்படும் பொருட்கள்:

* துவரம் பருப்பு – 300 கிராம்.

* சிறு கிழங்கு – 200 கிராம்.

* சேனை கிழங்கு – 200 கிராம்.

* கருணை கிழங்கு – 100 கிராம்.

* சேப்பக் கிழங்கு – 100 கிராம்.

* கத்தரிக்காய் – 150 கிராம்.

* முருங்கைக்காய் – இரண்டு

* மாங்காய் – ஒன்று

* பீர்க்கங்காய் – 100 கிராம்.

* பாகற்க்காய் – 100 கிராம்.

* கேரட்- 100 கிராம்.

* பீன்ஸ் அல்லது சீனி அவரைக்காய் – 100 கிராம்.

* அவரைக்காய் – 100 கிராம்.

* பச்சை மொச்சை – உரித்தது அரை படி.

* வாழைக்காய் – இரண்டு

* தடியங்காய் – ஒரு கீத்து.

* பூசணிக்காய் – ஒரு கீத்து.

* தக்காளி- ஆறு.

* நறுக்கிய ப.மிளகாய்- ஒரு தேக்கரண்டி.

* கருவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிதளவு

* புளி – தேவையான அளவு

*பூண்டு- ஒன்று.

* ரிபைண்ட் ஆயில்- 50 மி.லி.

* சீரகம்- அரை தேக்கரண்டி.

* சாம்பார் பொடி – 4 ஸ்பூன்

* சின்ன வெங்காயம்- 200 கிராம்.

* மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி.

*வெந்தயம்-அரை தேக்கரண்டி.

மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி.

* உப்பு- தேவைக்கு.

Poricha Kulambu,vegetables kulambu in tamil,tamil samyal vegetables kulambu in tamil

செய்முறை: –

எல்லா காய்கறிகளையும் இரண்டு செ.மீட்டர் அளவிற்கு துண்டுகளாக நறுக்குங்கள். கிழங்குகளையும் சிறிதாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் தக்காளி வெட்டி கொள்ளவும். மல்லிஇலையை நறுக்கி வையுங்கள். புளியை நீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

முதலில் கிழங்குகளை ஒரு பத்திரத்தில் போட்டு வேக வைக்கவும். பிறகுஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் போட்டுப் பொரிந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும்.

அதில் பூண்டு தக்காளியும் சேர்த்து மூன்று நிமிடங்கள் கிளறுங்கள். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சாம்பார் பொடி போன்றவைகளையும் சேருங்கள். பிறகு வெட்டி வைத்துள்ள காய்களை போட்டு வதக்கி ஒன்றாக்கி புளி கரைசல் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். கொதித்ததும் பருப்பைக் கடைந்து ஊற்றவும். தீயை லேசாக எரியவிட்டு வேக வைத்த கிழங்குகளையும் போட்டு மூடிவைத்து வேகவிடுங்கள்.

அத்தோடு உப்பு தூளும் சேருங்கள். எல்லாவற்றையும் கிளறி இறக்குங்கள். சாம்பாரை இறக்குவதற்கு முன் வெந்தயம் தனியாவை சிவக்க வறுத்து கடைசியில் சீரகம் சேர்த்து இலேசாக வறுத்து மூன்றையும் நைசாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை சாம்பாரை இறக்கியதும் அதில் தூவவும். நறுக்கிய மல்லி இலை, மிளகாய் ஆகியவைகளைச் சேர்த்து அலங்கரியுங்கள்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors