வெண்டைக்காய் பொரியல்|vendakkai poriyal recipe tamil

Loading...

தேவையானவை

1. வெண்டைக்காய்- 20
2. உப்பு- தேவையான அளவு
3. தயிர்- 1 டீஸ்பூன்
4. எண்ணெய்- 1 டீஸ்பூன்
5. கடுகு- 1 டீஸ்பூன்
6. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
7. மிளகாய்வற்றல்- 2
8. கறிவேப்பிலை- 1 இணுக்கு
9.காயம்- சிறிதளவு
10.தேங்காய்த்துருவல்- 2 டீஸ்பூன்

செய்முறை:

1. வெண்டைக்காயை நன்றாக அலம்பிக் கொண்டு வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
2. தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக் கொண்டு வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும். அதனுடன் தயிரைச் சிறிது சேர்க்கவும். காயத்தையும் போடவும்.
3.வெண்டைக்காய் வதங்கினவுடன் தேங்காய்பூவைப் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

vendakkai poriyal recipe tamil,vendakkai poriyal cooking tips in tamil,vendakkai poriyal samayal kurippu

கூடுதல் டிப்ஸ்

1. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெண்டைக்காயை ஐந்தே நிமிடங்களில் தயார் செய்து விடலாம். அறிவு வளர்ச்சிக்கு உதவும்.

2. வெண்டைக்கயை வட்டமாகப் பொடியாக நறுக்குவதற்குப் பதிலாக நீளமாக நறுக்கியும் செய்து பார்க்கலாம்.

3. வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை உடையது என்பதால் தயிர் சேர்ப்பது கொழகொழப்பை எடுத்து விடும். அதிகத் தயிர் விடக் கூடாது.

4. தயிருக்குப் பதில் புளித்தண்ணீர் சிறிது விட்டும் செய்யலாம்.

5. காரம் சேர்க்க விரும்புவோர் மிளகாய் வற்றலைத் தாளிக்காமல் வெண்டைக்காய் வதங்கும் போது சிறிது காரப்பொடி சேர்த்து நீண்ட நேரம் வதக்கி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வெண்டைக்காய் வறுவலாகவும் செய்து உண்ணலாம்

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors