வெண்டைக்காய் புளிக்குழம்பு|vendakkai puli kulambu in tamil

தேவையான பொருட்கள்:

 • வெண்டைக்காய் – 1/4 கிலோ
 • பெரிய வெங்காயம் – 1
 • தக்காளி – 2
 • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
 • குழம்பு மிளகாய்த்தூள் – 1/2 டீ ஸ்பூன்
 • மஞ்சள்தூள் – 1/4 டீ ஸ்பூன்
 • கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
 • வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
 • உளுந்து – 1/4 டீ ஸ்பூன்
 • கடுகு – 1/4 டீ ஸ்பூன்
 • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு

vendakkai puli kulambu,vendakkai puli kulambu in tamil ,cooking tips vendakkai puli kulambu,tamil nadu samyal kurippu vendakkai puli kulambu

செய்முறை:

 • வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி புளிக்கரைசல் தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
 • குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து,வெந்தயம்,கறிவேப்பிலை சேர்த்துப் பொரிய விடவும்.
 • பின் வெங்காயம், வெண்டைக்காய், தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். புளிக்கரைசலைச் சேர்க்கவும். தேவைப்படின் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
 • வெண்டைக்காய் லேசாக இந்தப் புளிக்கரைசலில் மூழ்கி இருக்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
 • முதல் விசில் வந்த பின் தணலைக் குறைத்து 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிட்டு பின் அடுப்பை அணைக்கவும்.
 • இதனுடன் தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors