வெங்காய வடை|vengaya vadai in tamil

Loading...

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – ½ கப்
கோதுமை மாவு – ½ கப்
அரிசி மாவு- 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
சோடா உப்பு – ½ டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
ஆரஞ்சு புட் கலர் / கேசரி பவுடர் – சிறிது
மிளகாய்த்தூள் – ¼ டீ ஸ்பூன் (தேவைப்பட்டால்)
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

 

vengaya vadai in tamil,onian vadai,tamil samyal vengaya vadai in tamil

செய்முறை:

ஒரு வெங்காயத்தை நீளவாக்கிலும், மற்றொன்றை பொடியாக சிறிய சதுர துண்டுகளாகவும்  நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தை இப்படி இரண்டு விதமாக நறுக்கிபோடும்போது வடை நல்லா உருண்டையா போண்டா போன்று உருட்டிபோட வரும்.

பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.கறிவேப்பிலையை அலசி அதையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அரிசி மாவு,கோதுமை மாவு,கடலை மாவு மூன்றையும் ஒன்றாக போட்டுக் கலக்கவும். சோடா உப்பு, ஆரஞ்சு கலர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மாவுடன் சேர்த்து கலக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பிசறிவிடவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி தெளித்து வடையாக உருட்டி போடும் அளவிற்கு மாவை பிசைந்து கொள்ளவும். சற்று கெட்டியான மாவாக வைத்துக்கொண்டு எண்ணையில் பொறித்து எடுக்கவும். மாவில் தண்ணி அதிகம் சேர்த்துவிட்டால் உருட்டிபோட வராது.

எண்ணையும் அதிகமாக உறிஞ்சும். பிசைந்த மாவில் உப்பு, காரம் சரியாக உள்ளதா என பொரிக்கமுன் ஒருமுறை பார்த்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது உப்பும்,மிளகாய்த்தூளும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வானலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கவும். ஒரே மிதமான வெப்பத்தில் சீராக வைத்து வடைகளாக போட்டு பொரித்து எடுக்கவும். இதை சட்னி தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

Loading...
Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors