மணப்பெண் அழகுடன் திகழ சில நடைமுறைகள்|wedding girl makeup tips in tamil

மணப்பெண் மணநாள் அன்று தேவலோக தேவதை போன்று பொலிவுற காட்சிதர வேண்டும் என்றால் அதற்கான சில பிரத்யேக முறைகளை திருமண நாளன்று முன்கூட்டியே நடைமுறை படுத்திட வேண்டும். மணப்பெண் திருமணத்திற்கு முன்பு கையாள வேண்டிய சில நடைமுறைகள்.

மணப்பெண் என்றதும் மனதளவில் சிறு பதட்டம் ஏற்படவே கூடும். எனவே அவற்றை மறந்து சரியான நேரத்தில் ஆழ்ந்த உறக்கம் மேற்கொள்ள வேண்டும். அன்றாடம் 6 மணிநேரம் முதல் 7 மணி நேர உறக்கம் மேற்கொள்ளும் மணப்பெண்ணின் உடல், மனம், முகம் எல்லாம் மிக பிரகாசமாய் ஜொலிக்கும். பெரிய பட்டு புடவை, பெரிய லெஹன்கா போன்றவை மணநாளன்று உடுத்த வேண்டும். ஆனால் மணப்பெண் அதனை அணிய ஏற்ற உடல் திறனின்றி ஒல்லியாக பலமின்றி இருந்தால் நன்றாக இருக்காது.

 

wedding girl makeup tips in tamil

உடனே நிறைய சாப்பிட்டு உடம்பை குண்டாக ஆக்கிவிட வேண்டாம். முகச்சருமம் மற்றும் உடல் சருமங்களில் இறந்த செல்கள் அப்படியே இருக்கும். அதனை திருமணத்திற்கு முன்பே நமது உடலுக்கு ஏற்ற பூச்சுக்களை கொண்டு நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். நமது வீட்டில் உள்ள பழக்கூழ் மற்றும் பொருட்களை கொண்டும் இதனை செய்யலாம். திருமணத்திற்கு முன்பு ஸ்பா போன்றவை சென்றாலும் இப்பணி மூலம் சருமம் கூடுதல் பொலிவு பெறும். மணப்பெண்ணின் விரல் நகங்கள் பளபளப்பாக திகழ அவ்வப்போது மெனிக்யூர் செய்ய வேண்டும்.

வைரம் போல ஜொலிக்கும் விரல் நகங்களை பெற மெனிக்யூர் செய்வது அவசியம். நல்ல அழகு நிபுணர் மூலம் கவனத்துடன் நகங்களை கையாளுதல் வேண்டும். திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு முழு உடலிற்கும் மெழுகு பூச்சு செய்து உடல் முடிகளை அகற்றிட வேண்டும். மெழுகு பூச்சு செய்வதால் உடனடியாக முடி வளர்ச்சியடையாது. கண் புருவத்தை வடிவமைத்து கொள்ளவும். மெழுகு பூச்சு முடித்து சில நாளில் சருமத்தின் மீது ஏதனும் ஸ்கிரப்ஸ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் சரும் போஷாக்காகும்.

திருமணத்திற்கு சில மாதங்கள் முன்பே மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துவிட வேண்டும். எனவே திருமண நாளிற்கு முன்கூட்டியே ஒருவாரம் முன்பு நாம் வாங்கி வைத்திருக்கும் அலங்காரபொருட்களை அணிந்து மேக்கப் செய்து ஒரு டிரயல் செய்திட வேண்டும். அதேநேரம் அதனை போட்டோ எடுத்து பார்த்து அதில் ஏதேனும் மாற்றம் செய்திட நினைத்தால் அதனையும் மாற்றிடலாம்

Loading...
Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors