பலாப்பழ அல்வா|palapala samayal kurippu in tamil
தேவையானது
பலாச்சுளை —10
தேங்காய் துருவல் 1கப்
சர்க்கரை—2 கப்
நெய்— அரை கப்
பலாச்சுளையை நெய்யில் வதக்கி, தேங்காய் துருவலுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
வாயகன்ற அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் நீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு கொதிக்கும் போது, அரைத்ததை சேர்த்து கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது ஏலப்பொடி.போட்டு கீழே இறக்கி, வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து அலங்கரிக்கவும்.
பயன்கள்
பலாச்சுளையில், விட்டமின் ஏ–5%, சி–11%,இரும்புச் சத்து,கால்சியம் –3% உள்ளது.இதைத்தவிர நிறைய தாதுச்சத்துக்களும் உள்ளது.